உள்ளூர் செய்திகள்

பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-07-21 13:29 IST   |   Update On 2023-07-21 13:29:00 IST
  • பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர் ஊராட்சி யில் உள்ள முல்லை பெரியாறு ஆற்றங்கரையில் இன்று அதிகாலை ஓரிடத்தில் தீப்பற்றி எரிந்து கரும்புகையாக வந்துள்ளது. ஆற்றங்கரை அருகே குடி யிருப்பவர்கள் இதைக்கண்டு சந்தேகமடைந்து அருகே சென்று பார்த்த போது ஒரு பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண் டது தெரியவந்துள்ளது.

உடனடியாக அலங்கா நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சமயநல்லூர் சரக டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசா ரணையை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே ஊரைச் சேர்ந்த விஜயா (வயது46) என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் இவர் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் திண்ணரை உடம்பில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் என்பது போலீ சாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார் விஜயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்து இறந்த விஜயாவிற்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இவரது கணவர் மார்கண்டன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News