உள்ளூர் செய்திகள்

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-04 12:03 IST   |   Update On 2023-11-04 12:03:00 IST
  • உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் வீர பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடம் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் உள்ள நிலம் ஓட்டக்கோவில் பாறை செங்குளம் ஊரணி மற்றும் சவுந்தரபாண்டியன் கரடு என வருவாய்த்துறை ஆவணத்தின்படி உள்ளது. இந்த இடங்களில் உள்ள பாறையை சுற்று வட்டார கிராம விவசாயிகள் தானியங்களை உலர்த்தும் களமாகவும், போக்குவரத்துக்கு பொதுப்பாதையாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்றவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், வழக்கறிஞர் வீர பிரபாகரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News