தமிழ்நாடு செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தல் 2026: அ.தி.மு.க. - பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தம்?
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
- கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது.
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார்.
அ.தி.மு.க. உடனான கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரமும் இன்றே தெரிய வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. பா.ம.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அன்புமணி தரப்பு அ.தி.மு.க.வுடன் கைகோர்க்கிறது.
ராமதாஸ் தரப்பு யாருடன் கூட்டணி வைக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.