மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மக்களின் கவனத்திற்கு... குடிநீர் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https;//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
- குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் வழக்கம்போல நடைபெறும்.
சென்னை:
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் எம்.ஆர்.சி.நகர் குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. எனவே, நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை எம்.ஆர்.சி. நகர் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், நந்தனம், ராஜா அண்ணாமலை புரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https;//cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் வழக்கம்போல நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.