தமிழ்நாடு செய்திகள்

எந்தெந்த துறைகளில் எவ்வளவு ஊழல் - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பட்டியல்

Published On 2026-01-06 14:36 IST   |   Update On 2026-01-06 14:36:00 IST
  • சென்னை மாநகராட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
  • ஆதி திராவிட நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார்.

அப்போது தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுக்களை அவர் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

* நகராட்சி நிர்வாக துறையில் ரூ.64 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* சென்னை மாநகராட்சியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* தொழில் துறையில் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* பள்ளிக்கல்வி துறையில் ரூ.5ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* வேளாண் துறையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* சமூக நலத்துறையில் ரூ.4ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* இந்து சமய அறநிலையத்துறையில் ரூ. ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* ஆதி திராவிட நலத்துறையில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

* இளைஞர் நலத்துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.

* சுற்றுலாத் துறையில் ரூ.250 கோடி ஊழல் என அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை முழுமையாக சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லாததால் தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் அண்டை மாநிலத்துக்கு சென்று விட்டன. கடந்த 4½ ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News