உள்ளூர் செய்திகள்

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு

Published On 2023-07-20 15:15 IST   |   Update On 2023-07-20 15:15:00 IST
  • போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் இறந்தார்.
  • தப்பி சென்ற பைரவமூர்த்தி, டேவிட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை மகபூப்பாளையம் டி.பி. மெயின் ரோடு பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சோதனை நடத்தினர். அங்கு 8 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கெஸ்ட் ஹவுசின் மேலாளர் ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த டார்வின், மகபூப்பாளையம் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன், தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த விக்னேஷ் பாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் சென்னை வடபழனி பெருமாள் தெருவை சேர்ந்த பாண்டியன் (53) என்பவர் கெஸ்ட் அவுஸ் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தப்பி சென்ற பைரவமூர்த்தி, டேவிட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News