உள்ளூர் செய்திகள்

மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள கிழக்கு ஊராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Published On 2023-09-13 13:50 IST   |   Update On 2023-09-13 13:50:00 IST
  • ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

மதுரை

தமிழகம் முழுவதும் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் 13ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார அளவில் பணி புரிபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News