உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் உதவித்தொகை பெற மீண்டும் இணையதளம் தொடக்கம்

Published On 2023-06-17 14:18 IST   |   Update On 2023-06-17 14:18:00 IST
  • மாணவர்கள் உதவித்தொகை பெற மீண்டும் இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது.
  • வருகிற 30-ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் கல்வி பயின்ற ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்வத ஆதி திராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான https:/tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வருகிற 30ந்தேதிக்குள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. மேலும், காலநீட்டிப்பு வழங்க இயலாத சூழ்நிலையுள்ளதால் குறித்த காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News