அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது பிறந்தநாளை யொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
- ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்- அமைச்சர் என்ற மன நிலையை மறந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரை வாய்க்கு வந்த வார்த்தை களால் விமர்சித்துள்ளார்.
மணிப்பூர் சம்பவம் மிக வும் வேதனை தரத்தக்கது தான். இதற்கு அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 21-ந் தேதி எடப்பாடி யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.
ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை யாக, முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசக் கூடாது.
எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வரு கிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசி உள்ளார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் தலைவராக எடப்பாடியார் உள்ளார்
எடப்பாடியாரை பழிப்ப தாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழிப்ப தாக உள்ளது. திருச்சி கூட்டத்தில் எடப்பாடியாரை கொத்தடிமை என்று விமர் சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த பேச்சால் 2 கோடி தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது.
எனவே உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.