- புதிய குப்பை அள்ளும் வாகனங்களை தலைவர் தொடங்கி வைத்தார்.
- மக்கும்-மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சி யில் 27 வார்டுகளில் சேகரிக் கப்படும் குப்பைகள் வீடு வீடாக சென்று மக்கும் -மக்காத குப்பைகள் தனித்தனியே பிரித்து வாங்கப்படுகிறது. அவை குப்பை கிடங்கில் கொட்டப் பட்டு வருகின்றன.
இது தவிர தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், ெரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் குப்பைகளை சேகரிப்ப தற்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு சேகரிக் கப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக நவீன குப்பை அள்ளும் 3 வாகனங் கள் திருமங்கலம் நகராட்சி சார்பில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட் டன.
இந்த வாகனங்களை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் நித்யா 3 புதிய வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்த னர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவியம், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், சுகா தார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.