- செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 11½ பவுன் நகை-ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி பங்களா மேடு தெருவை சேர்ந்தவர் புது ராஜா (வயது 42). இவர் செல்போன் பழுது பார்க்கும் கடை மற்றும் விற்பனை செய்யும் கடை வைத்துள் ளார். இவரது மனைவி க.விளக்கு மருத்துவமனை–யில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் புது ராஜாவின் நண்பரான திலீப்குமார் அவரிடமிருந்து வாங்கிய கடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றார். அந்த பணத்தை வீட்டின் உள் அறையில் இருந்த பீரோவில் வைத்து பூட்டிவிட்டு மகனை அழைத் துக் கொண்டு கடைக்கு சென்றார்.
முன்னதாக மனைவி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், புதுராஜாவின் மகள் தனிஷ்கா (14) வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தாக–மாய் இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று தனிஷ் காவிடம் கேட்டுள்ள–னர்.
அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவரது கவனத்தை திசைதிருப்பிய அந்த பெண்கள் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த பணம் ரூ.8 லட்சம் பணம் மற்றும் ஏற்கனவே இருந்து 11½ பவுன் தங்க நகைக–ளையும் திருடி சென்றனர். சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டு போலீசார் வழக் குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.