மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
- மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரக் குளம் கிராமத்தில் முதல–மைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டை–யன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க ஒரு திட்டத்தை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரக் குளத்தில் தொடங்கி வைப் பதை நான் பெருமையாக கருதுகிறேன். இது இந்தியா–வின் முன்னோடி திட்டமாக உள்ளது. உன்னதமான நோக்கத்தில் உருவாக்கப் பட்ட இந்த திட்டம் மிகப்பெ–ரிய வெற்றி அடைய வேண் டும். இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவிட வேண் டும்.
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய பெண்கள் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்வது வழக் கம். ஆனால் தாமாக வந்து தி.மு.க. அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை விசா–ரிக்கும் அந்த நீதி அரசர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மீதும் தாமாக வந்து விசாரணை செய்வதிலும் வேகத்தை காட்ட வேண்டும். நீதி என் பது அனைவருக்கும் ஆன–தாக இருக்க வேண்டும். ஒரு சாரருக்கு மட்டும் இருக்கக் கூடாது.
அ.தி.மு.க.வினர் ஆளுங் கட்சியினரை ஏதாவது பழி சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வளை–யங்குளத்தில் நடைபெற்ற மாநாட்டில் வந்தவர்களுக்கு உணவு கூட அளிக்க முடி–யாத நிலையில் தான் உள்ளனர். இதனால்தான் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி, முன் னாள் அமைச்சர்கள் செல் லூர் ராஜூ, ஆர்.பி.உதய–குமார், ராஜன் செல்லப்பா போன்றவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் சென்று விட்டார்.
தமிழக அமைச்சர் உதய–நிதி ஸ்டாலின், மீண்டும் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறியதை வரவேற்கி–றேன். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக் கும். அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப் படும். அந்தந்த மாநிலங் களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் இருக் கும்.
தமிழக அரசு நிராகரிக்கும் எந்த திட்டங்களையும் ராகுல் காந்தி தலைமையி–லான அரசு தமிழகத்தில் திணிக்காது. இதை முன்னெ–டுத்து இருக்கின்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலி–னுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி–னார்.
நிகழ்ச்சியில் அவருடன் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலை–வர் பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.பழனிகுமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் சத்யன், வித்யா–பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.