உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க.வில் இணைந்த மாணவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உறுப்பினர் அைடயாள அட்டை வழங்கியபோது எடுத்தபடம்.

தி.மு.க. வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டது: டி.டி.வி.தினகரன் கேள்வி

Published On 2023-10-02 07:11 GMT   |   Update On 2023-10-02 07:11 GMT
  • தி.மு.க. வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டது.
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாணவ, மாணவியர் அணி சார்பில் கட்சியில் இணை யும் விழா பொதுச் செயலா ளர் டி.டி.வி.தினகரன் முன் னிலையில் இணைத்து உறுப் பினர் அட்டை பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக டி.டி.வி. தினகரனை திருமங்கலம் பெரியார் சிலை முன்பு மாணவியர் அணி செயலா ளர் ஜீவிதா நாச்சியார், தொண்டர்களுடன் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் சந்தைப்பேட்டையில் திரு மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண் ணன், வடக்கு ஒன்றிய செய லாளர் வினோத், திருமங்க லம் நகரச் செயலாளர் வைரவன் ஆகியோர் வர வேற்றனர்.

நிகழ்ச்சியில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்தி ரன் தலைமை தாங்கி பேசி னார். அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, மகளிர் அணி செய லாளர் வளர்மதி ஜெபராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

பழனிச்சாமி செய்த தவறுகளால் மக்கள் தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்தியுள்ள னர். பொய்யான வாக்குறுதி களை கொடுத்து மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மாணவர் களுக்கு கல்விக்கடன் ரத்து, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பை பெற்றுத் தரு வார்கள் என்று சொன் னார்களே என்னவாயிற்று?

இளம் சமுதாயத்திற்கு நல்வழிகாட்டுதலை செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. அரசுத் துறையில் வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று, பெரும் கனவான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறையாக நடத்த முடிய வில்லை. பொறியியல், கலைக்கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக் கில் உள்ளது. அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்.

தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து விடுபட வேண் டுமென்றால் மீண்டும் தமி ழகத்தில் அம்மாவின் ஆட் சியை உருவாக்கி தரவேண் டும். அதற்கு மாணவர்களின் பங்களிப்பு இருக்கவேண் டும். எப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் மாண வர்களின் எழுச்சி இருக்கும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக பாடு பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

Tags:    

Similar News