உள்ளூர் செய்திகள்

தலைமறைவான ரவுடி கைது

Published On 2023-01-13 14:31 IST   |   Update On 2023-01-13 14:31:00 IST
  • மதுரையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
  • வீட்டில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.

மதுரை

மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து காசி மணி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

இந்த நிலையில் காசிமணி மதுரை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காசிமணி ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News