உள்ளூர் செய்திகள்

விதிகளை மீறிய 3,773 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு-அபராதம்

Published On 2023-10-27 09:10 GMT   |   Update On 2023-10-27 09:10 GMT
  • மதுரை நகரில் 2 நாட்களில் விதிகளை மீறிய 3,773 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
  • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை

மதுரை நகர் பகுதியில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் ேபால் சாலைகளில் விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து ள்ளது.

அதிவேகமாக செல்லு தல், ஹெல்மெட் அணியா மல் செல்வது, அனுமதிக்கப் பட்ட நபர்களை விட அதிகளவில் வாகனங்களில் செல்வது உள்ளிட்ட விதி மீறல்களால் விபத்துகளும் அதிகரித்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சாகசம் செய்வது அதிகரித்துள்ளது.

மதுரை நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தர விட்டார். அதன் அடிப்படை யில் நகரில் கடந்த 24 மற்றும் 25-ந்தேதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகன ஓட்டிய58 பேர் மீதும், குறைபாடுகொண்ட நம்பர் பிளேட்டுடன் 756 வாக னங்கள் மீதும், சைலன் சரில் மாற்றம்செய்து அதிக சத்தத்துடன் ஓட்டிச் சென்ற 28 வாகனங்கள் மீதும் மொத்தம் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது .அக்டோபர் மாதத்தில் மட்டும் விதிமீறி ஓட்டப்பட்ட மொத்தம் 3773 வாகனங்கள் ஓட்டிச்சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கப் பட்டது. இனி வரும் நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News