- இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோட்டில் உள்ள ஏ.ஜி.சுப்புராமன் தெருவை சேர்ந்தவர் செந்தில்பாண்டி. இவரது மகன் சஞ்சய் (வயது18). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அதன்பின் பள்ளிக்கு செல்லவில்லை.
மது பழக்கத்திற்கு அடிமையான சஞ்சய் சம்பவத்தன்ற போதையில் செல்போனை உடைத்து விட்டார். புது செல்போனை வாங்குவதற்காக பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். இதில் விரக்தியடைந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.
இளம்பெண்
ஆனையூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி நாகலட்சுமி(வயது27). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனராஜ் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த நாகலட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்மட்டிபுரம் மனோ ரஞ்சிதம் தெருவை சேர்ந்த வர் கேசவராஜ்(வயது30). இவருக்கும், இவரது மனைவி ரேவதிக்கும் குடும்ப பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவர்களை அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மன அழுத்தத்தில் இருந்த கேசவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.