உள்ளூர் செய்திகள்

பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

15 பவுன் நகை- பணம் கொள்ளை

Published On 2022-11-19 08:28 GMT   |   Update On 2022-11-19 08:28 GMT
  • தலைமை ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
  • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனை எதிரே குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது65), இவர் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சித்ரா. இவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.

கள்ளிக்குடி அருகே உள்ள தென்னமநல்லூரில் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சித்ரா இறந்துவிட்டார். இதனால் ராமநாதன் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்ைத பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருமங்க லத்தில் உள்ள ராமநாதன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய ராமநாதன் நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News