உள்ளூர் செய்திகள்

30 நிமிடங்கள் இடைவிடாது யோகாசனம் செய்த மாணவ, மாணவிகள்.

15 யோகாசனம் இடைவிடாதுசெய்து மாணவ, மாணவிகள் சாதனை

Published On 2023-10-30 07:27 GMT   |   Update On 2023-10-30 07:27 GMT
  • திருமங்கலத்தில் 30 நிமிடங்களில் 15 யோகாசனம் இடைவிடாதுசெய்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
  • உலக சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

திருமங்கலம்

திருமங்கலம் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் சோழன் உலக சாதனை பத்தகம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக் கான யோகா உலகசாதனை நிகழ்ச்சி திருமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

உடல்நலத்தை பேணிக் காக்கும் வகையில் நடை பெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 5 வயது முதல் 17 வயதுவரையிலான 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு ஆசனத்தில் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 15 யோகா ஆசன நிலைகளில் 30 நிமிடங்கள் இடைவிடாத செய்து நமது உடலை சமநிலையில் வைத்திருக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்வு நடை பெற்றது.

உலக சோடாகான் கராத்தே அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சோழன் உலக புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் மாஸ்டர் பால் பாண்டி வரவேற்றார்.

இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாத ஹஸ்தா சனம், உட்கட்டா சனம், திருகோண ஆசனம், பச்சிமோதாசனம், மச்சா சனம், பாலாசனம், புஜங்கா சனம் உள்ளிட்ட 15 யோகா ஆசனங்களில் ஒரு ஆச னத்தில் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 30 நிமி டங்கள் அனைத்து ஆசன நிலை களிலும் உடலை சமநிலை யில் வைத்திருந்தனர். மாணவ, மாணவியர்களின் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 15 யோகா ஆசன உலக சாதனை முயற்சி வெற்றி பெற்றதாக சோழன் புத்தகம் அறி வித்தது. இதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவி யர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. உலக சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News