உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை நடக்கிறது

Published On 2022-07-23 15:00 IST   |   Update On 2022-07-23 15:00:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
  • 1,270 மையங்களில் ஊசி போடப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் நடக்கிறது.

கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 333 ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணி யாளர்களுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிட்ஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News