உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரிஅம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு

Published On 2022-07-14 15:34 IST   |   Update On 2022-07-14 15:34:00 IST
  • உணவுகளுக்கு முறையாக டோக்கன் வழங்காமல் உணவு விற்பனை நடைபெறுவதை கண்டறிந்தார்.
  • உணவுகள் தரமாகவும், சுகாதாரத்துடனும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சந்தைபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் பரிதா நவாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அம்மா உணவகத்திற்கு சென்ற அவர் உணவின் தரம் குறித்து அம்மா உணவகத்தில் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

மேலும் உணவகத்தில் பணியாற்றுபவர்களின் வருகை பயிவேடுகளையும் ஆய்வு செய்த அவர், உணவுகளுக்கு முறையாக டோக்கன் வழங்காமல் உணவு விற்பனை நடைபெறுவதை கண்டறிந்தார்.

தொடர்ந்து அம்மா உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு முறையாக பில் வழங்கப்பட வேண்டும் என்றும், உணவுகள் தரமாகவும், சுகாதாரத்துடனும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனல் சுப்பிரமணி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜ், சரவணன், மேற்பார்வையாளர் சரவணன், ஜான்டேவிட், முனீர் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News