உள்ளூர் செய்திகள்

புகளூர் நகராட்சி பகுதிகளில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2022-12-21 07:47 GMT   |   Update On 2022-12-21 07:47 GMT
  • புகளூர் நகராட்சி பகுதிகளில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்தது.
  • அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கரூர்:

கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 15-வது நிதி குழு மானியத்தில் கடைவீதி பேருந்து நிறுத்தம் வரை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைத்தல் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23 மற்றும் அம்ருத்ரன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் செம்படாபாளையம் பகுதியில் புதிதாக பூங்கா அமைத்தல் பணி மற்றும் அதே திட்டத்தின் கீழ் ராம்நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக பூங்கா அமைத்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு புகளூர் நகரக் கழகச்செயலாளரும், நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கனிராஜ், துணைத் தலைவர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News