உள்ளூர் செய்திகள்

தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்போலீசார் அதிரடி நடவடிக்கை

Update: 2023-06-02 12:51 GMT
  • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
  • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

கன்னியாகுமரி:

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News