உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-17 07:33 GMT   |   Update On 2023-03-17 07:33 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
  • அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட நினைக்காதீர்கள்

நாகர்கோவில்:

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஆரல்வாய்மொழி நகர பூங்காவில் நடந்தது.

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கிருஷ்ண தாஸ், இளைஞரணி இணை செயலாளர் சிவசெல்வராஜன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை முன்னிலை வகித்தனர்.

ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமார் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் அதிகாரியை அடித்த இயக்கம் தி.மு.க. தான். எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட நினைக்காதீர்கள். அது உங்கள் மீது பாய்ந் துவிடும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் ஒளிமயமாக இல்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, லஞ்சம் தலைவிரித்து ஆடு கிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்டும் நாள் வந்து விட்டது.

மக்கள் சந்தோசமாக வாழ தமிழகம் ஒளிமயமாக அ. தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நாகர் கோவில் மாநகராட்சி கவுன் சிலர் அக் ஷயாகண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட்தாஸ், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட பொருளாளர் திலக், மாவட்ட துணைச் செயலாளர் பார்வதி, குமரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சிவ குற்றாலம், மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், விசு, நிர்வாகிகள் சந்துரு, சகாயராஜ், ரெயிலடி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News