உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் விளக்குகள் கண்காட்சி

Published On 2023-08-31 06:48 GMT   |   Update On 2023-08-31 06:48 GMT
  • சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
  • கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட அரசு அருங்காட்சிய கத்தில் ஏராளமான அரிய பொருட்கள் உள்ளன. இந்த பொருள்களின் முக்கியத்து வத்தை எடுத்துக்கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தமாதம் கலைநயம் மிக்க பாரம்பரிய விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெற்றன.

கலை ஆர்வம் மிக்க நமது முன்னோர்கள் செம்பிலும், பித்தளையிலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் வீட்டு உபயோக பொருள்களை வடித்துள்ளனர். அதிலும் குறிப்பாக விளக்குகளில் பல்வேறு வகையான விளக்குகளை பயன்படுத்தி உள்ளனர். இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விளக்குகளை பார்ப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கு என்று கூறினர். ஆனால் உண்மையில் இவை கஜ லட்சுமி விளக்குகள் என்று சொல்லப்படுகின்றன.2 யானைகளுக்கு நடுவில் அம்மன் உள்ளது. கஜம் என்பது சமஸ்கிருதத்தில் யானையை குறிக்கும். 19-ம் நூற்றாண்டில் இந்த மாதிரியான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ள விளக்குகள் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. நமது முன்னோர்கள் பயன்படுத்திய அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சியின் நோக்கம் என்று கன்னியாகுமரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

Tags:    

Similar News