உள்ளூர் செய்திகள்
குழித்துறை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி
- டீ குடிப்பதற்காக குழித்துறையில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்றார்
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில் :
மார்த்தாண்டம் கண்ணன் கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 69), தொழிலாளி. இவர் தினமும் காலை வீட்டிலிருந்து பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க செல்வது வழக்கம்.
இன்று காலையில் ஞானதாஸ் டீ குடிப்பதற்காக குழித்துறையில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது மதுரையில் இருந்து புனலூர் நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் ஞானதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.