நகை, பணம் திருடப்பட்ட கோவிலின் முன்பு திரண்ட கிராமக்கள்.
அம்மன் கோவிலில் நகை-பணம் திருட்டு
- இன்று காலை அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோவிலின் முகப்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துதனர்.
- அம்மனின் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள மேலவாழக்கரை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் தினமும் மதியம் 1 மணி அளவிலேயே தினசரி கால பூஜை நடைபெறும். இந்நிலையில் இன்று காலை அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோவிலின் முகப்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துதனர்.
இதுகுறித்து அவர்கள் திருக்குவளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார் கோவிலின் உள்ளே சென்று பார்த்ததில் 2 கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
மேலும் அம்மனின் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலி திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும் கோவிலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் கோவில் சார்பில் வசூல் செய்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.54 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பதும விசாரணையில் தெரியவ ந்துள்ளது. இது தொடர்பாக திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.