உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே சிறுத்தை தாக்கி ஜல்லிக்கட்டு காளை பலி

Published On 2022-12-24 12:33 IST   |   Update On 2022-12-24 12:33:00 IST
  • தோட்டத்திற்குள் திடீரென வந்த சிறுத்தை ஒரு காளை கன்றை தாக்கியதில் அது உயிரிழந்தது
  • சிறுத்ைதயை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கைலாசநாதர்கோவில் பின்புறம் உள்ளஅவரது மாந்தோப்பில் 6 ஜல்லிக்கட்டு காளை கன்றுகளை வளர்த்து வருகிறார். இந்த காளைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது திடீரென வந்த சிறுத்தை ஒரு காளை கன்றை தாக்கியதில் அது உயிரிழந்தது.

மேலும் 2 ஜல்லிக்கட்டு காளை கன்றுகள் மாயமாகி உள்ளது. அந்த காளைகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைலாசநாதர்கோவில் பகுதியில் கடந்த 4 மாதங்களில் மாடுகள், ஆடுகள், நாய்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை விவசாய நிலங்களில் புகுந்து கால்நடைகளை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

எனவே வனத்துறையினர் சிறுத்ைதயை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News