உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு சாலை மறியல்

Published On 2023-09-16 09:52 GMT   |   Update On 2023-09-16 09:52 GMT
  • மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • 18 பெண்கள் உள்பட 28 பேர் கைது

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி அமைப்பினர் சார்பில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, இந்தி திணிப்பு ஆகிய பிரச்சினைகளுக்காக மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா செயலாளர் மொரச்சன் தலைமை தாங்கினார். போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஆஷா பணியாளர் சங்க மாநில துணை தலைவர் வசந்தகுமாரி, ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் பெனடிக்ட், போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்க நிர்வாகி தங்கதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் திடீரென பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைைமயி லான போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பெண்கள் உள்பட 28 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News