சூளகிரியில் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது
- வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.
- வடிவேலு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமராவதியை குத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காளிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி அமராவதி (வயது33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு (35) என்பவருக்கும் இடையே கடந்த 6 வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வடிவேலு சூளகிரியில் உள்ள வெல்டிங் பட்டரையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வடிவேலுவுக்கும், அமராவதிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.
அப்போது வடிவேலு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமராவதியை குத்தினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அமராவதியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.