உள்ளூர் செய்திகள்

நாகையில் நர்சிங் கல்லூரி மாணவிகள் நடனமாடினர்.

நாகையில், மண்டல அளவிலான நடன போட்டி

Published On 2023-07-15 07:19 GMT   |   Update On 2023-07-15 07:19 GMT
  • பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
  • தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

நாகப்பட்டினம்:

பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி உள்ள ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவிகள் மேலோங்கி வர மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஊக்குவிப்பு தொடர்பான பாடல்கள் முதல் பின்னல் கோலாட்டம் என வித்தியாசமான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

தொடர்ந்து 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையில் நடைபெற்ற சிகை அலங்கார போட்டியில் வித்தியாசமான முறையில் பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.

இதைப்போல சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை தங்களின் முகங்களில் வரைந்து முக ஓவிய போட்டியில் வண்ணமயமான முகங்களுடன் மாணவிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற மெஹந்தி போட்டியில் கை முழுவதும் மருதாணிகள் போட்டு தங்களுடைய திறமைகளை நர்சிங் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.

மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் அடுத்த மாதம் மாநில அளவில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News