உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் பெட்டிகடையை அடித்து நொறுக்கிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
- 2 பேர் மாதையனை தாக்கியும், பெட்டிகடையும் அடித்து நொறுக்கினர்.
- புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ராசுவீதி பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது34). இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (23), வைத்தீஸ்வரன் ஆகியோர் கூல்ரிங்ஸ் குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேர் மாதையனை தாக்கியும், பெட்டிகடையும் அடித்து நொறுக்கினர்.
இது குறித்து மாதையன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.