உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பழக்கடையில் தீ விபத்து

Published On 2022-09-11 10:00 GMT   |   Update On 2022-09-11 10:00 GMT
  • போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
  • அலமாரிகள் எரிந்து நாசமானது.

அரவேணு,

கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் சாலையில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல் பகுதியில், காய்கறி மற்றும் பழக்கடை செயல்பட்டு வந்தது.

கடந்த சில மாதம் முன்பு அங்கு கடை நடத்தி வந்தவர் கடையை காலி செய்தார். ஆனால், கடையில் பயன்படுத்திய மரத்தால் ஆன அலமாரிகளை கொண்டு செல்லாமல், அங்கேயே வைத்திருந்தார்.

இந்தநிலையில் இரவு 10.15 மணியளவில் பழக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அலமாரிகள் தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், அலமாரிகள் எரிந்து நாசமானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News