உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
கெலமங்கலத்தில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
- கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு தலைமை தாங்கினார்.
- கிருஷ்ணகிரி கலை குழு சார்பாக கலைநிகழ்ச்சிகள் பெற்றது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், பட்டியல் அணி மாநில துணைத்தலைவி கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி கலை குழு சார்பாக கலைநிகழ்ச்சிகள் பெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்ராஜ் தலைவர் ராஜேஷ்குமார், ஆனந்த், மாவட்ட செயலாளர் வரலட்சுமி, மண்டல தலைவர்கள் சீனிவாஷ், ரவி, செயலாளர் ரூபாஜி, பேராட்சிதலைவர் கோவிந்தப்பா, உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள். முடிவில் பொதுசெயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.