உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளியில் ஸ்கேட்டில் மாணவர்கள் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்

Published On 2022-08-14 14:45 IST   |   Update On 2022-08-14 14:45:00 IST
  • மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியேந்தி சென்றனர்.
  • ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக அணிவகுத்து சென்று பொதுமக்களை ஈர்க்க செய்தது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் அஜீப். ஸ்கேட்டிங் போட்டியில் 16 மெடல்ஸ் வாங்கியுள்ளான். மேலும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளான்.

இதேபோல் அகிலேஷ் குமார் 9 வயது சிறுவன் ஸ்கேட்டிங் போட்டியில் 8 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இம் மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியேந்தி 75-வது சுதந்திர தினத்தை மரியாதை செலுத்தும் வகையில் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் முதல் கொடமாண்டப்பட்டி சாலை வரை தேசியக் கொடியேந்தி ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக அணிவகுத்து சென்று பொதுமக்களை ஈர்க்க செய்தது.

Tags:    

Similar News