தமிழ்நாடு செய்திகள்

அஜித் பவார் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2026-01-28 11:02 IST   |   Update On 2026-01-28 11:02:00 IST
  • விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
  • இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது.

மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.

இந்த விமான விபத்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் நடந்தது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன் விமானத்தில் இருந்த மேலும் 5 பேரும் பலியானார்கள்.

இந்த நிலையில், அஜித் பவார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மாண்புமிகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் பலர் ஒரு துயரமான விமான விபத்தில் இறந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

சோகத்தின் அளவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. சரத் பவார் மற்றும் இந்த கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

Tags:    

Similar News