உள்ளூர் செய்திகள்

பாகலூரில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-08-13 15:33 IST   |   Update On 2022-08-13 15:33:00 IST
  • பாகலூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
  • பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினார்.

ஓசூர்,

75-வது இந்திய சுதந்திர தினவிழா வாரம், வீடுகள் தோறும் வருகிற 17-ந்தேதி வரை "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் ேதசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி செயல்படுத்தும் வகையில், பாகலூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி.ஜெயராமன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தேசியக்கொடியை வழங்கினார். மேலும் இதில், துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News