உள்ளூர் செய்திகள்

1 மணி நேரத்தில் காமராஜரின் முக வடிவம் 120 ஓவியம் வரைந்து அசத்திய ஓவியர்

Published On 2022-07-16 15:03 IST   |   Update On 2022-07-16 15:03:00 IST
  • காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும்.
  • 1 மணி நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்து அசத்தினார்.

ஓசூர்,

ஓசூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஓவியர் கோவிந்தராஜ் (49). காமராஜரின் மீது அளவற்ற மதிப்பும், நேசமும் கொண்ட இவர், நேற்று காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், காமராஜரின் 120 முகம் உருவப்படங்களை 1 மணி நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்து அசத்தினார்.

அவரது இந்த வித்தியாசமான செயலைக் கண்டு பொதுமக்கள் வியந்து மிகவும் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News