உள்ளூர் செய்திகள்

குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடி

Published On 2022-08-13 15:34 IST   |   Update On 2022-08-13 15:34:00 IST
  • 2,600 மாணவ, மாணவிகளுக்கும், அவரவர் வீடுகளில் ஏற்றிட இலவசமாக தேசிய கொடியை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கினார்.
  • அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிட பிரதமர் மோடி கூறினார்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகிறது. வருகிற 15-ந் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் படிக்க கூடிய 2,600 மாணவ, மாணவிகளுக்கும், அவரவர் வீடுகளில் ஏற்றிட இலவசமாக தேசிய கொடியை பள்ளியின் நிறுவனர் வி.எம்.அன்பரசன் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிட பிரதமர் மோடி கூறினார்.

அவர் கூறியதை போல எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் தேசிய கொடி ஏற்றிட 2,600 மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக இன்றைய தினம் தேசிய கொடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சங்கீதா அன்பரசன், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஷர்மிளா, மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமணன், பள்ளி மேலாளர் பூபேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News