உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

விவசாய தோட்டத்தில் சிறுத்தை கால் தடம் பதிவு

Published On 2023-04-11 15:25 IST   |   Update On 2023-04-11 15:25:00 IST
  • தோட்டத்திற்குள் சிறுத்தையின் கால்தடம் பதிவானதை கண்டு அச்சம் அடைந்தார்.
  • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி யில் சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வேட்டை யாடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியையொட்டி அமைந்துள்ள சித்தன் குட்டை கிராம த்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார்.

தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி தோட்டத்திற்குள் சிறுத்தையின் கால்தடம் பதிவானதை கண்டு அச்சம் அடைந்தார்.

இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் பகுதியில் தானியங்கி கேமிரா பொருத்தி கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News