விவசாயிகள்-சங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்
- இன்று காலை விவசாயிகளுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
- சத்தியமங்கலம் போலீசார் பூ மார்க்கெட்டுக்கு விரைந்து வந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைவும் பூக்களை விவசாயிகள் அதிகாலை நேரத்தில் அறுவடை செய்து அவற்றை சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் முறையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
தினமும் சுமார் 5 டன் அளவுக்கு பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும். இந்த ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் நிர்வாகிகள் தேர்தல் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. எனவே உடனடியாக தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந் ெதடுக்க வேண்டும் என்று சில விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த பிரச்சினை காரணமாக இன்று காலை விவசாயிகளுக்கும், சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுப்பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் பூ மார்க்ெகட்டுக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.