மேல்புவனகிரியில் என்ஜீனியரிங் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை
- பிரவீன்குமார் (வயது 33). மெக்கானிக்கல் என்ஜீனியர் .இவரின் தாயார், நீண்டநேரமாக இவரை போனில் அழைத்தார்.அவர் போனை எடுக்கவில்லை.
- பிரவின் குமார் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
கடலூர்:
புவனகிரியை அடுத்த மேல்புவனகிரியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 33). மெக்கானிக்கல் என்ஜீனியர். இவர் தனது தாயார், தம்பியுடன் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். அங்கு லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி பிரவீன் குமார் நேற்று மேல்புவனகிரிக்கு வந்தார். தனக்கு சொந்தமான வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. அதே நேரத்தில் அவரது தாயார், பிரவீன்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அவரது போனையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது தாயார், மேல் புவனகிரியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் கதவை தட்டினார். கதவை திறக்காததால், சந்தேக மடைந்த உறவினர்கள் வீட்டின் பக்கவாட்டில் இருந்த விண்டோ ஏ.சி.மெஷினை கழட்டி அந்த வழியே உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரவின் குமார் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக புவனகிரி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடன் தொல்லையால் தூக்குபோட்டு இறந்தாரா? அல்லது திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்கில் தொங்கினாரா? வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.