உள்ளூர் செய்திகள்

டவுன் தெற்கு ரத வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-07-18 09:09 GMT   |   Update On 2023-07-18 09:09 GMT
  • ஆனி தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும்.
  • தேரோட்டத்தின் போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் 4 ரத வீதிகள் அமைந்துள்ளது. இந்த ரதவீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத்தின் போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும். இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் விழாக்களின் போது சப்பரங்கள் வீதிஉலா வரும்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆனி தேரோட்டத்தின் போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் தெற்கு ரத வீதியில் வாகையடி முனையில் இருந்து சந்தி பிள்ளையார் முக்கு வரையிலும் ஆக்கிர மிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு ரத வீதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், கடை கூரைகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

Tags:    

Similar News