உள்ளூர் செய்திகள்

பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தில் பயன்பெற முடியும் - வேளாண் அலுவலர் தகவல்

Published On 2022-07-09 15:24 IST   |   Update On 2022-07-09 15:24:00 IST
  • 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2000 பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் வருகிற 11-ந் தேதி முதல் சரிபார்க்கபடுகிறது.
  • தங்களின் நில ஆவணங்கள் சரிபார்த்த பின்பே அடுத்த தவணை மற்றும் நிலுவையில் உள்ள தவணை வரவு வைக்கப்படும்.

வேதாரண்யம்:

தலைஞாயிறு உதவி வேளாண்மை அலுவலர் நவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தில் 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2000 பெறும் விவசாயிகள் அனைவரும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் தலைஞாயிறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வருகிற 11-ந் தேதி (திங்கள்கிழமை) முதல் தங்களின் ஆவணங்கள் சரிபார்க்கபடுகிறது.

இதில் விவசாயிகள் கணினி சிட்டா,ஆதார் அட்டை நகல்,ஸ்மார்ட் கார்டு நகல், வங்கி பாஸ்புக் நகல்போட்டோ-1 ஆகியவை கொண்டு வர வேண்டும்.தங்களின் நில ஆவணங்கள் சரிபார்த்த பின்பே அடுத்த தவணை மற்றும் நிலுவையில் உள்ளத் தவணை வரவு வைக்கப்படும். எனவே இத்திட்டத்தில் ஏற்கனவே பயன்பெறும் விவசாயிகள் இனி ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பிறகுதான் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News