உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல்
- மணிகண்டன், சின்னசாமியை தாக்கி காயப்படுத்தியதுடன் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் சரகம் ராம்நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). கூலி தொழிலாளி.
இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 30). நில தகராறு தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் எதிரொலியாக மணிகண்டன், சின்னசாமியை தாக்கி காயப்படுத்தியதுடன் கத்தியை காட்டி மிரட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சின்னசாமி தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.