கோவையில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் டிரைவர் தற்கொலை
- தினேஷ்குமார். லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
- தினேஷ்குமார் மனைவியின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கினார்.
கோவை,
கோவை ரத்தினபுரி அருகே உள்ள கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். லோடு ஆட்டோ டிரைவர். திருமணமாகி மனைவி மற்றும் குந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் தினேஷ்குமாருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்து. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர் தினசரி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் தினேஷ்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று குடிபோதையில் தினேஷ்குமார் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இதனையடுத்து அவர் அருகே உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.அப்போது வீட்டில் தனியாக இருந்த தினேஷ்குமார் மனைவியின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தினேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.