உள்ளூர் செய்திகள்

சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி

Published On 2022-11-17 09:07 GMT   |   Update On 2022-11-17 09:07 GMT
  • சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • டி.என்.பி.எஸ்.சியால் அடுத்த ஆண்டு 25.02.2023 அன்று நடத்தப்பட உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயின்ற 104 தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான முதன்மைத்தேர்வு டி.என்.பி.எஸ்.சியால் அடுத்த ஆண்டு 25.02.2023 அன்று நடத்தப்பட உள்ளது. முதன்மைத் தேர்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 22-ந்தேதி காலை 11 மணிக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும் பாடத்தொகுப்புகள், இலவ சமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை 21-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் empvgslm08@gmail.com, mailto:empvgslm08@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News