உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு பரிசு வழங்கிய பள்ளி நிர்வாகிகள்.


மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி - சிவகிரி மாணவருக்கு வெண்கல பதக்கம்

Published On 2022-12-15 09:31 GMT   |   Update On 2022-12-15 09:31 GMT
  • மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

சிவகிரி:

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும், குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் சிலம்பம் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட கம்பு சண்டை, 35 கிலோ பிரிவு போட்டியில் கலந்து கொண்ட சிவகிரி பாலவிநாயகர் உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் கருப்பசாமி வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி செயலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரிய - ஆசிரியைகள், பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News