உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தண்டவாளங்களில் நடந்து செல்ல கூடாது

Published On 2023-08-31 10:16 GMT   |   Update On 2023-08-31 10:16 GMT
  • பக்தர்கள் சாலைகளின் நடுவே அபாயக ரமான இடங்களில் நடந்து செல்வதை தவிர்த்திட வேண்டும்.
  • போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்:

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . செப்டம்பர் 9-ம் தேதி வரை விழா நிறைவடைகிறது. இந்த விழாவில் இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சப்பரத்துடன் பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழக டிரைவர்கள் கவனத்துடனும், நிதானமாகவும், வளைவுகளில் திரும்பும்போது ஹாரன் சத்தம் செய்தும் , பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியும் செல்ல வேண்டும்.

நடத்துனர்களும் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களிடம் கனிவாகவும், அன்பாகவும் நடந்த கொள்ள வேண்டும். அதே போல போக்குவரத்து கழக நிர்வாகமும் வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு பஸ்களை முறையாக பராமரித்து இயக்கிட வேண்டும்.

பாதயாத்திரையாக வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் சாலை விதி, போக்குவரத்து விதிமுறைகளை மதித்து, இடது புறமாக ஒருவர் பின் ஒருவராக வரிசையாக செல்ல வேண்டும். பக்தர்கள் ரெயில்வே தண்டவாளங்கள், சாலைகளின் நடுவே அபாயக ரமான இடங்களில் நடந்து செல்வதை தவிர்த்திட வேண்டும் என்று போக்கு வரத்து தொழிலாளர் சம்மே ளனம் ஏ.ஐ.டி.யூ.சி மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News