உள்ளூர் செய்திகள்

புதிய கல்லூரி கட்டுமான பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் பாலசுப்ரமணியம், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் புதிய கலை, அறிவியல் கல்லூரி கட்டுமான பணி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-06 06:41 GMT   |   Update On 2023-05-06 08:54 GMT
  • கடலூர் மாவட்டம் கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் கட்டபடவுள்ள புதிய கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
  • கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்,

கடலூர்:

கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சிக் குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் உயர்கல்வி துறை சார்பில் ரூ.7 கோடியே 97.50 மதிப்பீட்டில் புதியதாக கட்டபடவுள்ள கலை மற்றும் அறிவியில் கல்லூரி கட்டுமான பணியை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் பால சுப்ரமணியம், சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு குமராட்சி ஊராட்சிக்குட்பட்ட, கீழவன்னீயூர் கிராமத்தில் 4.02 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 32 ஆயிரத்து 626 சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன் , செயற்பொறியாளர் தொழில்நுட்ப பிரிவு கோட்டம் (தஞ்சாவூர்) பாலசுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் கலந்து கொண்டன

Tags:    

Similar News