ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனையை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரசார் சாலை மறியல்
- சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வி. அருணாச்சலம் , ஆர்.சாந்தகுமார், விக்டரி.எம்.மோகன், சங்கீதாபாபு, புழல் குபேந்திரன், கோபி, அலிம்புகாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் என்.வெங்கடேசன், ஏ.பி.சங்கர், எம்.சந்திரசேகரன், ஏ.நித்யானந்தம், கே.வி.ராஜன், எஸ்.பாபு, மணிகண்டன், ஜெ.ஜோஷிபிரேம்ஆனந்த், ஆர்.மதுசூதனராவ், ஆர்.ராமலு, டி.சிவசங்கர், ஏ.அமீத்பாபு , ஜெ.வி.எஸ்.மணிகண்டன் , கே.ஆர்.அன்பழகன், பி.அபிஷேக், எஸ்.கிரிதர், மாத்தூர் ரங்கநாயகி, ஜி.அச்சுதன், டி.ஜெயக்குமார், ஏ.ஆசீர்வாதம், ஜெ.மாரி, எஸ்.பி.நந்தன், எஸ் .கே.நவாஸ், பி.தேவேந்திரன், பி.சிவக்குமார், ஆர்.கலையரசன், ஜி.வேல்முருகன், க.தீனாள், விக்ரம்,மதன், ஆர்.ஆர்.சி.ராஜீவ்காந்தி, எச்.இஃபால்பாஷா, எஸ்.கே.வரதராஜன், ரஜினி, ஐசக், உமர், பயாஸ், இளங்கோ, அன்புக்கரசன், பிராகாஷ், வைத்தீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.